Monday, 15 December 2014

கவிஞர் த.சிவலிங்கம் அவர்களின் 'என் மழையில் விழுந்த பனிக்கட்டி சூடானது' கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 23, 201 அன்று திண்டிவனம் மரக்காணம் சாலை, இராஜராஜன் மகாலில் நடைபெற்றது. வரவேற்புரைஅருட்பா. ஆறுமுகம் நிகழ்த்தினார்.  நூலினை கவிஞர் த. பழமலய் வெளியிட, பேராசிரியர் பிரபா. கல்விமணி (எ) கல்யாணி பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு முனைவர் இரா. இலட்சாராமன் தலைமை வகித்தார். நிகழ்வினை அ. பழனிவேலு தொகுத்து வழங்கி சிறப்பித்தார். 






Sunday, 12 October 2014

தெருக்கூத்து

தெருக்கூத்து - ரா. அர்சுணன், தென்நெற்குணம் (துரியோதனன் வேடம்) 

..26.8.2014 இடம் கொள்ளார், திண்டிவனம் 









Friday, 1 August 2014

என் தேசம்


பூத்துக் குலுங்கும்
மலர்களின் வேர்களிலெல்லாம்
விரவிக் கிடக்கின்றன
எம் வியர்வைகள்......

திருவிழாக் கோலம் காணும்
தேரோடும் வீதியிலெல்லாம்
நிரம்பிக் கிடக்கின்றன
எம் எச்சங்கள்........

வானுயர்ந்த மாட மாளிகை,
கோட கோபுரங்களிலெல்லாம்
அழுத்தி பதிக்கப்பட்டிருக்கின்றன
எம் அடையாளங்கள்........

ஆம்.
புல், பூண்டு, புழு, மரம், மனிதம் என
எல்லாவற்றிலும் சூழ்ந்திருக்கின்றன
 எம் சுவாசங்கள்......

இப்போது சொல்லுவேன்
ஊர் கூட்டி உரக்கச் சொல்லுவேன்

இது என் தேசம் .... என் தேசம்... என் தேசம்........ 

Friday, 22 November 2013

அடியே பாசக்காரி



ஏகாந்த  காட்டுக்குள்ள
எனைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் பெண்ணே
நீ யாரு? எங்கிருந்து வர?

காட்டாற்று வெள்ளம் போல
சீறி வரும் சின்ன மச்சான்
நீ கேட்டவுடன் சொல்வதற்கு
நானென்ன உன் மச்சினியா

மச்சினியா ஆக்கிக் கொள்ள
மனசுண்டு எந்தனுக்கு – ஆனா
நீ சிரிச்ச காரணத்த
அறியாம நான் விட மாட்டேன்.

கருத்த முகத்தழகா  கம்பீர தோளழகா
என்னான்னு என்னால அறிய முடியல
உன்ன பார்த்த பிறகு – என்
உதட்ட அசைக்காமல் இருக்க முடியல

எள்ளுப்பூ மூக்கழகி இளவட்ட உடலழகி
ஆரவல்லி செடியோரம் கொஞ்சம்
குந்தி பேச ஆச உண்டா?

குந்தி மட்டும் பேசிவிட்டால்
குமரி ஏக்கமெல்லாம் தீர்ந்திடுமா?
சேர்ந்து வாழ ஆசை உண்டு மச்சான்
சோதிக்காத எனை நீயும்
பேதையாலும் தாங்க மாட்டேன்.

அடியே பாசக்காரி – உன்
அளவான பார்வையில
அடையாளம் கண்டுவிட்டேன் – உந்தன்
அழகையும் அளந்துவிட்டேன்.
எழுந்து வா ஓடிப் போவோம்
எட்டு திசை போற்ற வாழ்வோம்



Sunday, 15 September 2013

சேரியில் பிறந்த சிறுத்தை

சேரியில் பிறந்த சிறுத்தை
பூரிப்போடு பொங்கி எழுந்து
ஓங்கி அடிக்கிறது
சாதி இந்துவின்
புழுபிடித்த மூளையில்

தெறித்து ஓடுகிறது
அவன் சாதி ஆணவம் - அங்கே
செத்து மடிகிறது
ஆண்டையின் அதிகாரம் .

Wednesday, 28 August 2013

தெருக்கூத்து , நிகழ்விடம்: தென்நெற்குணம் , திண்டிவனம்



















Thursday, 8 August 2013

தெருக்கூத்து - நடுக்குப்பம், திண்டிவனம் வட்டம் , நாடகத்தின் பெயர்: வைசூர சம்மாரமென்னும் காத்தவராயன் சத்திய தூது

ஈஸ்வரன் வேடம் : ரா. அர்ஜுனன், தென் நெற்குணம்
பார்வதி வேடம் : மாரி, நடுக்குப்பம்




தேவேந்திரன் வேடம்: த. ஏழுமலை, தென்நெற்குணம்