Friday, 22 November 2013

அடியே பாசக்காரி



ஏகாந்த  காட்டுக்குள்ள
எனைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் பெண்ணே
நீ யாரு? எங்கிருந்து வர?

காட்டாற்று வெள்ளம் போல
சீறி வரும் சின்ன மச்சான்
நீ கேட்டவுடன் சொல்வதற்கு
நானென்ன உன் மச்சினியா

மச்சினியா ஆக்கிக் கொள்ள
மனசுண்டு எந்தனுக்கு – ஆனா
நீ சிரிச்ச காரணத்த
அறியாம நான் விட மாட்டேன்.

கருத்த முகத்தழகா  கம்பீர தோளழகா
என்னான்னு என்னால அறிய முடியல
உன்ன பார்த்த பிறகு – என்
உதட்ட அசைக்காமல் இருக்க முடியல

எள்ளுப்பூ மூக்கழகி இளவட்ட உடலழகி
ஆரவல்லி செடியோரம் கொஞ்சம்
குந்தி பேச ஆச உண்டா?

குந்தி மட்டும் பேசிவிட்டால்
குமரி ஏக்கமெல்லாம் தீர்ந்திடுமா?
சேர்ந்து வாழ ஆசை உண்டு மச்சான்
சோதிக்காத எனை நீயும்
பேதையாலும் தாங்க மாட்டேன்.

அடியே பாசக்காரி – உன்
அளவான பார்வையில
அடையாளம் கண்டுவிட்டேன் – உந்தன்
அழகையும் அளந்துவிட்டேன்.
எழுந்து வா ஓடிப் போவோம்
எட்டு திசை போற்ற வாழ்வோம்



Sunday, 15 September 2013

சேரியில் பிறந்த சிறுத்தை

சேரியில் பிறந்த சிறுத்தை
பூரிப்போடு பொங்கி எழுந்து
ஓங்கி அடிக்கிறது
சாதி இந்துவின்
புழுபிடித்த மூளையில்

தெறித்து ஓடுகிறது
அவன் சாதி ஆணவம் - அங்கே
செத்து மடிகிறது
ஆண்டையின் அதிகாரம் .

Wednesday, 28 August 2013

தெருக்கூத்து , நிகழ்விடம்: தென்நெற்குணம் , திண்டிவனம்



















Thursday, 8 August 2013

தெருக்கூத்து - நடுக்குப்பம், திண்டிவனம் வட்டம் , நாடகத்தின் பெயர்: வைசூர சம்மாரமென்னும் காத்தவராயன் சத்திய தூது

ஈஸ்வரன் வேடம் : ரா. அர்ஜுனன், தென் நெற்குணம்
பார்வதி வேடம் : மாரி, நடுக்குப்பம்




தேவேந்திரன் வேடம்: த. ஏழுமலை, தென்நெற்குணம்




Friday, 22 March 2013

துணிந்து எழு

அழுகைகள் ஒருபோதும் ஆபத்தை துடைப்பதில்லை
இயற்கையை அறி, எழுந்து ஓடு
உயர்வு உன் பக்கம், உண்மை உன்பக்கம்

ஏக்கங்கள் ஒருபோதும் எழுச்சியை தருவதில்லை
ஆக்கத்தை நினை, தூக்கத்தை ஓழி
மகிழ்ச்சி உன் பக்கம், மனநிறைவு உன்பக்கம்

கவலைகள் ஒருபோதும் துணிவை தருவதில்லை
உழைப்பை நம்பு உலகை புரிந்துகொள்
இன்பம் உன் பக்கம் நல்லெண்ணம் உன் பக்கம்

ஒப்பாரிகள் ஒருபோதும் துன்பங்களை துடைப்பதில்லை
துணிந்து எழு, துன்பத்தை மறந்து ஓடு
வெற்றி உன் பக்கம் வாலிபம் உன் பக்கம்


Friday, 1 March 2013

சுவடுகள்

ஓடி என்னை தேடிப் படிக்கிறேன்
ஒவ்வொரு வரியாய்
என்னில் அழுத்திப் பதிக்கிறேன்
மீண்டெழுந்து வருகிறாய்
உன் எழுத்தின் ஊடாக..
என்னை வெளியேற்றி
உன்னை நிரப்பி
என்னைத் தேடுகிறாய்.

போராட்டம் தொடங்கிற்று

உனக்கும் எனக்கும்
உன்னோடு நானும் சேர்ந்து
என்னைத் தேடுகிறேன்.

தேடித் தேடித் திரிகிறோம்

தெருவெங்கும்
நாம் பதித்த சுவடுகள் மட்டும்
மிச்சமாய்
நமக்குப் பின்......

Saturday, 19 January 2013

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை பொங்கல் விழா 14.01,.2013 அன்று கொண்டாடிய பொது எடுத்த  புகைப் படங்கள் 







Friday, 18 January 2013

மழைக்காதல்



ஒவ்வொரு மழைத்துளியும்
என்னை நனைத்து எழுதுகிறது
என் மீது உன் காதலை.

காலம் பல கடந்தும்
என் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது
உன் காதல். 

அடைமழையில் ஆனந்தத் கூத்தாடுகிறேன் நான்.
உன் உருவம் அறியாது.