ஏகாந்த காட்டுக்குள்ள
எனைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் பெண்ணே
நீ யாரு? எங்கிருந்து வர?
காட்டாற்று வெள்ளம் போல
சீறி வரும் சின்ன மச்சான்
நீ கேட்டவுடன் சொல்வதற்கு
நானென்ன உன் மச்சினியா
மச்சினியா ஆக்கிக் கொள்ள
மனசுண்டு எந்தனுக்கு – ஆனா
நீ சிரிச்ச காரணத்த
அறியாம நான் விட மாட்டேன்.
கருத்த முகத்தழகா கம்பீர தோளழகா
என்னான்னு என்னால அறிய முடியல
உன்ன பார்த்த பிறகு – என்
உதட்ட அசைக்காமல் இருக்க முடியல
எள்ளுப்பூ மூக்கழகி இளவட்ட உடலழகி
ஆரவல்லி செடியோரம் கொஞ்சம்
குந்தி பேச ஆச உண்டா?
குந்தி மட்டும் பேசிவிட்டால்
குமரி ஏக்கமெல்லாம் தீர்ந்திடுமா?
சேர்ந்து வாழ ஆசை உண்டு மச்சான்
சோதிக்காத எனை நீயும்
பேதையாலும் தாங்க மாட்டேன்.
அடியே பாசக்காரி – உன்
அளவான பார்வையில
அடையாளம் கண்டுவிட்டேன் – உந்தன்
அழகையும் அளந்துவிட்டேன்.
எழுந்து வா ஓடிப் போவோம்
எட்டு திசை போற்ற வாழ்வோம்
No comments:
Post a Comment