Friday, 26 January 2024

அனைவருக்கும் கல்வி பாடல் - கவிஞர் த. சிவலிங்கம்

 

கவிஞர் த. சிவலிங்கம்

அக்கம் பக்கம் ஆடிவரும்

அத்த வீட்டு பிள்ளையாட்டம்

பள்ளிக்கூடம் போகவேண்டும்  எம்மா ....

என் ஊனம் ஒரு பாரமில்ல எம்மா ....

 

கை காலு ஊனமுன்னு அம்மா நீங்க சொல்லாதீங்க

மாற்றுத்திறன் எனக்கு உண்டு அம்மா

நான் வீட்டில் ஒளி  ஏற்றிடுவேன் எம்மா

 

பள்ளிக்கூட வாசலிலே எங்களுக்கும் வாசல் உண்டு

பள்ளிக்கூடம்  போகப்போறன்  எம்மா ....

நான்  படிச்சி பட்டம் வாங்கிடுவேன் எம்மா ....

 

எவரெஸ்டு சிகரம் ஏறி வென்ற கத தெரியும்மம்மா

காலில்லா காலத்திலும்    எம்மா

அவர் சாதனதான் செய்தவரு  எம்மா .....

 

வாயால  எழுதிடுவேன் காலாலும் எழுதிடுவேன்

எங்களுக்கு காலம் உண்டு எம்மா ....

என்ன வீட்டில் சும்மா வைக்காதீங்க எம்மா ....

No comments:

Post a Comment