Monday, 9 July 2012

உன் பெயரை மட்டும் சொல்லும்.


மல்லிகைச்சரமே
என் மனதை 
தினம் கொள்ளும் 
மாணிக்க ரதமே 

நீ வீசும் வாசம் 
அந்த கணம் 
ஒரு நொடி நிற்கும் 
என் சுவாசம்.

உலகில் 
எங்கோ பறக்கிறேன் 
பிரபஞ்சத்தில் மிதக்கிறேன்.

மென்மை, பெண்மை 
என்ற வருணனை 
இல்லை இல்லையென்ற போதும் 
மனம் விடாமல் துரத்திக் 
கொல்லும் தினமெனை.

அழகினை அடைய 
அடைந்து கிடக்க 
வழியினை தேடுது 
என் உயிர் 
விழியின்றி வாடுது.


வசந்தத்தின் ஊஞ்சல் 
என் நினைவோடு செல்லும் 
ஒரு நொடி நின்று 
உன் பெயரை மட்டும் சொல்லும்.

அன்புடன் 
சோலைத் தென்றல் -- 


No comments:

Post a Comment