Friday, 22 March 2013

துணிந்து எழு

அழுகைகள் ஒருபோதும் ஆபத்தை துடைப்பதில்லை
இயற்கையை அறி, எழுந்து ஓடு
உயர்வு உன் பக்கம், உண்மை உன்பக்கம்

ஏக்கங்கள் ஒருபோதும் எழுச்சியை தருவதில்லை
ஆக்கத்தை நினை, தூக்கத்தை ஓழி
மகிழ்ச்சி உன் பக்கம், மனநிறைவு உன்பக்கம்

கவலைகள் ஒருபோதும் துணிவை தருவதில்லை
உழைப்பை நம்பு உலகை புரிந்துகொள்
இன்பம் உன் பக்கம் நல்லெண்ணம் உன் பக்கம்

ஒப்பாரிகள் ஒருபோதும் துன்பங்களை துடைப்பதில்லை
துணிந்து எழு, துன்பத்தை மறந்து ஓடு
வெற்றி உன் பக்கம் வாலிபம் உன் பக்கம்


Friday, 1 March 2013

சுவடுகள்

ஓடி என்னை தேடிப் படிக்கிறேன்
ஒவ்வொரு வரியாய்
என்னில் அழுத்திப் பதிக்கிறேன்
மீண்டெழுந்து வருகிறாய்
உன் எழுத்தின் ஊடாக..
என்னை வெளியேற்றி
உன்னை நிரப்பி
என்னைத் தேடுகிறாய்.

போராட்டம் தொடங்கிற்று

உனக்கும் எனக்கும்
உன்னோடு நானும் சேர்ந்து
என்னைத் தேடுகிறேன்.

தேடித் தேடித் திரிகிறோம்

தெருவெங்கும்
நாம் பதித்த சுவடுகள் மட்டும்
மிச்சமாய்
நமக்குப் பின்......