முதல்
குடிமகனே
எங்கள்
அப்துல் கலாமே
நீ
பதவியில் இருந்தாலும்
இல்லையென்றாலும்
நீ
இந்தியாவின்
முதல் குடிமகன் தான்
நீ
மட்டுமே
மரணத்தை
கூட ஜனனமாய்
மாற்றியிருக்கிறாய்
நீ
திருமணம் செய்து
பிள்ளை
பெற்றுக் கொள்ளவில்லை
என்றாலும்
இறுதிவரை
பிள்ளையாகவே
இருந்தாய்
பாரதத்
தாய்க்கு
பாரதத்
தாய்
அடிமைப்பட்ட
போது அழுதாள்
அதன்
பிறகு
இப்பொழுதுதான்
அழுகிறாள்
உன்
பிரிவிற்காக
நீ
வாழும்போது
உன்
அறிவைத் தந்தாய்
நீ
இறந்த போது
உன்
உயிரையெல்லாம்
எங்கள்
இதயங்களில்
பூசிவிட்டாய்
உனக்கு
மட்டும்
எப்படி
முடிந்தது
இந்தியாவையே
குடும்பமாய்
நினைப்பதற்கு
இந்தியாவைப்
பார்க்காத
வல்லரசு
நாடுகளை
இந்தியாவைப்
பார்க்கச் செய்தாய்
ஏவுகணைச்
சோதனையை
வெற்றிகரமாய்
நடத்தி
கண்ணிற்குத்
தெரியாத
அணுவிற்கும்
நீ
நாயகனாய்
திகழ்ந்தாய்
பாரதத்தில்
பிறந்து
பாரதத்தை
மறந்தவர்கள்
நாணமடைந்தார்கள்
உன்னைப்
பார்த்த போது
பறவைகளுக்கும்
கிடைக்காத
அக்கினிச்
சிறகு
உனக்கு
மட்டும்
எப்படி
வாய்த்தது.
கனவு
காணுங்கள்
என்ற
சொற்களுக்கு
நீயே
உதாரணமானாய்
நாம்
காணும் கனவுகள்
உயர்வானால்
நாமும்
உயர்வோம்
என்பதை
நீதான்
உணர்த்தினாய்
அதற்கு
எடுத்துக்காட்டாய்
உன்னையே
உயர்த்தினாய்
நீ
உதிராத
மலர்
இந்தியாவின்
இதயம்
பாரதத்தின்
எதிர்காலத்
தூண்கள்
வலிமையாய்
இருக்க வேண்டும்
என்பதால்
தான்
குழந்தைகளின்
வழிகாட்டியாய்த்
திகழ்ந்தாய்
உனக்கு
திருக்குறளில்
பிடித்த குரல்
‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’
என்றாய்
அந்த
வெள்ளத்தனைய
மலர்
நீட்டமாய்
நீயே
மலர்ந்தாய்
அப்துல்
கலாமே
உன்
உயிர் அணையவில்லை
வாழ்கிறது
என்றும்
அணையாத
எங்கள்
எழுச்சி
தீபமாய்........