Sunday, 8 November 2015

இளமை

 உன் புன்னகையில் 
கசங்கிப் போனது 
என் வாலிபம். 


என்னில் (க)விதையை 
யார் யாரோ விதைக்கிறார்கள்    
என்னைத் தவிர.

Tuesday, 28 July 2015

எழுச்சி தீபம் அப்துல் கலாம்


எங்கள் இந்தியாவின்
முதல் குடிமகனே
எங்கள் அப்துல் கலாமே
நீ பதவியில் இருந்தாலும்
இல்லையென்றாலும்
நீ
இந்தியாவின் முதல் குடிமகன் தான்

நீ மட்டுமே
மரணத்தை கூட ஜனனமாய்
மாற்றியிருக்கிறாய்

நீ திருமணம் செய்து
பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை
என்றாலும்
இறுதிவரை
பிள்ளையாகவே இருந்தாய்
பாரதத் தாய்க்கு

பாரதத் தாய்
அடிமைப்பட்ட போது அழுதாள்
அதன் பிறகு
இப்பொழுதுதான் அழுகிறாள்
உன் பிரிவிற்காக


நீ வாழும்போது
உன் அறிவைத் தந்தாய்
நீ இறந்த போது
உன் உயிரையெல்லாம்
எங்கள்
இதயங்களில் பூசிவிட்டாய்

உனக்கு மட்டும்
எப்படி முடிந்தது
இந்தியாவையே
குடும்பமாய் நினைப்பதற்கு

இந்தியாவைப் பார்க்காத
வல்லரசு நாடுகளை
இந்தியாவைப் பார்க்கச் செய்தாய்

ஏவுகணைச் சோதனையை
வெற்றிகரமாய் நடத்தி
கண்ணிற்குத்
தெரியாத அணுவிற்கும்
நீ
நாயகனாய் திகழ்ந்தாய்

பாரதத்தில் பிறந்து
பாரதத்தை மறந்தவர்கள்
நாணமடைந்தார்கள்
உன்னைப் பார்த்த போது

பறவைகளுக்கும்
கிடைக்காத
அக்கினிச் சிறகு
உனக்கு மட்டும்
எப்படி வாய்த்தது.

கனவு காணுங்கள்
என்ற சொற்களுக்கு
நீயே
உதாரணமானாய்
நாம் காணும் கனவுகள்
உயர்வானால்
நாமும் உயர்வோம்
என்பதை
நீதான் உணர்த்தினாய்
அதற்கு எடுத்துக்காட்டாய்
உன்னையே உயர்த்தினாய்

நீ
உதிராத மலர்
இந்தியாவின் இதயம்

பாரதத்தின்
எதிர்காலத் தூண்கள்
வலிமையாய் இருக்க வேண்டும்
என்பதால் தான்
குழந்தைகளின்
வழிகாட்டியாய்த் திகழ்ந்தாய்

உனக்கு
திருக்குறளில் பிடித்த குரல்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்
என்றாய்
அந்த வெள்ளத்தனைய
மலர் நீட்டமாய்
நீயே மலர்ந்தாய்

அப்துல் கலாமே
உன் உயிர் அணையவில்லை
வாழ்கிறது
என்றும் அணையாத
எங்கள்
எழுச்சி தீபமாய்........



Sunday, 14 June 2015

Jayabal. A Birthday Celebration in New Delhi. 02.12.2014
என்னுடைய 27 வது பிறந்தநாளின் போது (02.12.2014) புதுடில்லி சரோஜினி நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கர் வாடிகா பூங்காவில் உள்ள ததாகத் புத்தர், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்த போது எடுக்கப்பட காணொளி. உடன் நண்பர்கள், சின்மயி, பாலகங்காதர், கவிதா, மதன், சச்சிதானந்தம், ரம்யா, அய்யனார், மற்றும் யுவராஜ்.