பூத்துக்
குலுங்கும்
மலர்களின்
வேர்களிலெல்லாம்
விரவிக்
கிடக்கின்றன
எம்
வியர்வைகள்......
திருவிழாக்
கோலம் காணும்
தேரோடும்
வீதியிலெல்லாம்
நிரம்பிக்
கிடக்கின்றன
எம் எச்சங்கள்........
வானுயர்ந்த
மாட மாளிகை,
கோட
கோபுரங்களிலெல்லாம்
அழுத்தி
பதிக்கப்பட்டிருக்கின்றன
எம்
அடையாளங்கள்........
ஆம்.
புல், பூண்டு, புழு, மரம், மனிதம் என
எல்லாவற்றிலும்
சூழ்ந்திருக்கின்றன
எம் சுவாசங்கள்......
இப்போது
சொல்லுவேன்
ஊர் கூட்டி
உரக்கச் சொல்லுவேன்
இது என் தேசம்
.... என் தேசம்... என் தேசம்........