கவிஞர் த.சிவலிங்கம் அவர்களின் 'என் மழையில் விழுந்த பனிக்கட்டி சூடானது' கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 23, 201 அன்று திண்டிவனம் மரக்காணம் சாலை, இராஜராஜன் மகாலில் நடைபெற்றது. வரவேற்புரைஅருட்பா. ஆறுமுகம் நிகழ்த்தினார். நூலினை கவிஞர் த. பழமலய் வெளியிட, பேராசிரியர் பிரபா. கல்விமணி (எ) கல்யாணி பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு முனைவர் இரா. இலட்சாராமன் தலைமை வகித்தார். நிகழ்வினை அ. பழனிவேலு தொகுத்து வழங்கி சிறப்பித்தார்.
Monday, 15 December 2014
Sunday, 12 October 2014
Friday, 1 August 2014
என் தேசம்
பூத்துக்
குலுங்கும்
மலர்களின்
வேர்களிலெல்லாம்
விரவிக்
கிடக்கின்றன
எம்
வியர்வைகள்......
திருவிழாக்
கோலம் காணும்
தேரோடும்
வீதியிலெல்லாம்
நிரம்பிக்
கிடக்கின்றன
எம் எச்சங்கள்........
வானுயர்ந்த
மாட மாளிகை,
கோட
கோபுரங்களிலெல்லாம்
அழுத்தி
பதிக்கப்பட்டிருக்கின்றன
எம்
அடையாளங்கள்........
ஆம்.
புல், பூண்டு, புழு, மரம், மனிதம் என
எல்லாவற்றிலும்
சூழ்ந்திருக்கின்றன
எம் சுவாசங்கள்......
இப்போது
சொல்லுவேன்
ஊர் கூட்டி
உரக்கச் சொல்லுவேன்
இது என் தேசம்
.... என் தேசம்... என் தேசம்........
Subscribe to:
Posts (Atom)