கூத்தாடி பொழப்பு எல்லாம் காத்தாடி படும் பாடு.
சமீபத்தில் வெளியான 'வெங்காயம்' தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் ' இக்கதைகள் அனைத்தும் உண்மையே: கற்பனை இல்லை' என்று தான் தொடங்குகிறது. இந்தப் படத்தில் இந்து மத சாமியார்களின் வாக்கிற்க்கும், சூழ்ச்சிக்கும், வக்கிர புத்திக்கும் பலியான சில குடும்பங்களின் கதைகள் சொல்லப்படுகிறது. இதில் சேலம் பகுதியைச் சார்ந்த கணேஷ் என்ற தெருக்கூத்தாடியின் வாழ்க்கை என்னுடைய மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அதனைப் பற்றியதான பதிவுதான் இந்த கட்டுரை. கணேஷ் பேர்போன கூத்தாடி. கூத்துதான் அவரின் குடும்பத்தை கொண்டு செல்கிறது. கணேஷ் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உண்டு.
மகன் காய்ச்சலால் அவதிப்பட கணேஷ் அவனை பாண்டிச்சேரி அழைத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்க்கு தேவையான பண வசதி அற்றவனாக கணேஷ் இருக்கிறான். ஓலை போட்ட குடிசை வீடு. இந்த நிலையில் கணேஷ் தெரிந்தவர், சுற்றம் பக்கத்தினர் என எல்லோரையும் கேட்டு வெறுத்த போன நிலையில் தன்னோடு கூத்தாடும் குழுவினருடன் கடைசியில் முறையிடுகிறான். அவர்கள் கணேசை திட்டி அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி கொடுக்கிறார்கள். இந்த நிகழ்வு முதலில் என்னை பாத்தித்தது. அதாவது ஒரு கலைஞனின் வலியை, அவனுடைய சூழலை ஒரு சக கலைஞன் தான் அறிய முடிகிறது. அதிலும் கூத்தாடி என்றால் எல்லோருக்கும் இளக்காரம் தான். ' கூத்தாடி பயனுக்கு திமிர பாரு' இப்படி தான் ஊரில் சிறுவர் முதல் பெரியவர் வரை கூற கேட்டிருப்போம். இந்த நிலைதான் அனைத்து கூத்தாடிகளுக்கும்.
கூத்தாடி என்ற சொல் இங்கு இழிவு என்பதோடு தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை இருப்பதை உணர முடிகிறது. சங்க காலத்தில் கூத்தர் என்று மரியாதையோடு விளித்துள்ளதை அறிகிறோம். பின்னாளில் அவர்களின் சமூகம், பொருளாதாரம் போன்ற சூழல்களின் அடிப்படையில் இந்த சமூகத்தில் மதிப்பு குறைய ஆரம்பித்தது. இதனை நாம் கூத்தியாள் என்றாள் சொல்லில் இருக்கும் இழிவுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். மண்ணின் கலைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் கலைஞனின் நிலையை வெங்காயம் படத்தில் காண முடிகிறது.
கதையில் கணேஷ் அவர்கள் சக கூத்தாடிகள் திரட்டி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்து ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் மருத்தவரை சந்திப்பதற்க்கு முன், கனேஷின் மகனை நரபலிக்காக சமூக விரோதிகள் சிலர் கடத்தி சென்று அவனை பலி கொடுத்தப் பின் பார்க்க நேர்ந்த தந்தையின் வாழ்க்கை மிகக் கொடூரமானது. அந்த காட்சிகள் அனைத்தும் மிக ஆழமான வலியை தரக் கூடியதாகவே இருக்கிறது.பின் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய, பணம் வேண்டும் என்று மருத்தவர்கள் கூற, அதனைக் கேட்ட மகன் தன் தந்தையிடம் "உன்னிடத்தில் தான் பணம் இல்லையே என்று கேட்பதும்,. என்னை சாக விட்டுடாதப்பா" என்ற மகனின் கடைசி வார்த்தையும், பணம் திரட்ட வேண்டி ரோட்டில் கூத்தாடிக் காட்டும் கணேஷின் நிலையும் உச்ச கட்ட வேதனையை அளிக்கிறது.

அந்த நாட்களில் நான் சில நாட்கள் அவனுடன் தங்கியிருந்தேன். அந்த நாட்களில் தினமும் பாரதக் கதைகள், நீதிக் கதைகள் என சொல்லுவார். அந்த வார்டில் இருந்த அத்தனை பெரும் ஆவலுடன் கேட்க ஓடி வருவர். பிறகு நல்ல முறையில் என்னுடைய மாமாவின் மகன் அறுவை சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய ஓராண்டில் கூத்து முடிந்து வீடு திரும்பிய வேளையில் விபத்து ஏற்பட்டு ஒருவாரம் புதுவை ஜிப்மரிலும்., சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரின் இழப்பு அவர் சார்ந்த அந்த கூத்துக் கும்பலுக்கும் மட்டுமல்லாது. ஒட்டுமொத்த கூத்துக் கலைக்கே ஏற்பட்ட இழப்பாக மாறியது. கூத்தின் மதிப்பு இவரைப் போன்ற சிலரால் தான் உயிர்ப்பு பெற்றிருந்தது உண்மை.
.jpg)
இங்கு எனக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. கூத்தாடி பொழப்பு காத்தாடி படும் பாடு. சரி, கூத்தாடியை பாதியிலே இழந்த அவரின் குடும்பம் படும் பாடு ?